சக போட்டியாளரான விஜய், அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னுக்கு சென்றுக்கொண்டிருக்க, தொடர்ந்து தோல்வி படங்களால் நொந்து போயிருந்தார் அஜித்.
பெரிதும் அவர் எதிர்பார்த்த 'ஆழ்வார்', 'கிரீடம்' போன்றவையும் ஏமாற்றம் அளிக்க, நீண்ட யோசனைக்கு பின்னரே 'பில்லா'வை ஒப்புகொண்டார்.
தற்போது 'பில்லா' சூப்பர் ஹிட் அடித்து, அஜித்துக்கு புதிய நம்பிக்கை தந்திருப்பதோடு, இன்று நூறாவது நாள் கொண்டாடுகிறது. இதில் ரொம்பவும் பூரிப்பில் இருக்கிறார் அஜித்.
கடந்த ஆண்டு வசூலில் சாதனைப்படைத்த படங்களில் 'பில்லா'வும் ஓன்று. அதிக வசூலைக் குவிக்கும் 10 இடங்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது.
பொதுவாக தேவையில்லாத ஆடம்பரம், விழாக்கள் போன்றவற்றை அஜித் விரும்புவதில்லை. அதே போன்று 'பில்லா'வின் வெற்றி விழாவை தவிர்த்துவிட்டு அடுத்தப்பட வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.