முதன் முறையாக ஆல்பம் ஒன்றில் நடிக்கிறார் விஜய். இதில் விஜயுடன் சேர்ந்து ஆட்டம் போடுபவர் நயன்தாரா. இந்தியன் பிரிமியர் லீக்கின், சென்னை கிங்ஸ் அணி விளம்பரத்துக்கான ஆல்பம் இது.
ராஜீவ்மேனன் இயக்கும் இந்த வீடியோ ஆல்பத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுத, கிரிக்கெட் நட்சத்திரங்களும் இதில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள இந்த ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.