பாகிஸ்தானில் பிரதமர் யூசுப் கிலானி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளபோதிலும் , அமைச்சரவை அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இந்த வார இறுதிக்குள் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இலாகாக்களை ஒதுக்கீடு செய்வதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் நவாஸ் ஷெரீப் தலைமயிலான பிஎம்எல் - என் கட்சி மற்றும் அவாமி தேசிய கட்சிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
மேலும் கூட்டணி அரசில் முத்தாகிதா குவாமி இயக்க கட்சியை சேர்க்க பிஎம்எல் - என் கட்சி மற்றும் அவாமி தேசிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் இழுபறி நிலைக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே பிரதமர் கிலானி தனது அரசு மீது பாராளுமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.