ஹாலிவுட் நடிகர் ஒருவர் நம்மூர் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே தீருவேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
வில் ஸ்மித் என்ற நடிகர் பல்வேறு படங்களில் நடித்தவர். ஹாலிவுட் நாயகிகளின் அழகு அவருக்கு போரடித்துவிட்டதோ என்னவோ, இந்திய அழகு மீது அவருக்கு தீராத ஆசை.
இதனால் தனது புதுப்படத்தில் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை கேட்டிருக்கிறார். ஆனால், பார்க்கலாம் என்று ஐஸ் பிடிகொடுக்காமல் பதிலளித்ததும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராயின் திருமணத்துக்கு முன்னர் இருந்தே, அவருடன் ஜோடியாக நடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறாராம் வில் ஸ்மித்.