சரோஜா படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் இயக்குகிற படம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய படம் போலவே நகைச்சுவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை எடுத்து வருகிறார் வெங்கட்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சரோஜா படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜின் பிடிவாதம் யூனிட்டையே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அது சண்டைக்காட்சியாம். அடிவாங்க வேண்டிய பிரகாஷ்ராஜ், அதன் பின் அதே வேகத்தோடு கீழே விழுவது போல் காட்சி. டைரக்டர் காட்சியை விளக்கியதும் டென்ஷன் ஆகிவிட்டாராம் பிரகாஷ்ராஜ்.
நான் எவ்வளவு பெரிய ஆள். எனக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் தெரியுமா? யாரோ ஒரு புதுமுகம் அடிக்க, நான் கீழே விழ வேண்டுமா? நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். நடிப்புக்காக தன்னையே உருக்கிக் கொள்ளும் பிரகாஷ்ராஜின் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்காத வெங்கட் பிரபு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டாராம் அவர்.
கடைசியில் பிரகாஷ்ராஜ் தாக்கப்படுவது போல எடுத்தவர்கள், கீழே விழுகிற காட்சிக்கு டூப்பை பயன்படுத்தினார்களாம்.
“செல்லம்.... என்னாச்சு உனக்கு?”