அறை எண். அரைகுறை எண்ணாகிவிட்டதில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் அப்செட்! முன்பே யோசித்திருந்தால், எஸ்கேப் ஆகியிருக்கலாமாம். எப்படி? இப்படத்தின் திரையரங்க உரிமையை மட்டும் எட்டு கோடி ரூபாய்க்கு கேட்டதாம் ரிலையன்ஸ் நிறுவனம். வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை, இன்னும் சில உரிமைகளை விற்றாலே படத்திற்காக செலவு செய்ததை எடுத்திருக்கலாம். ரிலையன்ஸ் கொடுக்கிற எட்டு கோடி மொத்தமும் லாபம் ஆகியிருக்கும்.
ஆனால் இரண்டரை கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்திற்கு ஷங்கர் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 12 கோடி! அதுவும் தியேட்டர் உரிமைக்கு மட்டும். குளுகுளுப்பாக குறுந்தொகையை கொடுத்து முடித்துவிடலாம் என்று நினைத்திருந்த ரிலையன்ஸ், இப்படி பெருந்தொகையை கேட்டதும், எடுத்தது ஓட்டம்.
இப்போது அறை எண் பெட்டிகள் அறைக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டதால், தப்பித்தோம் என்று ரிலையன்சும், தப்ப விட்டுவிட்டோமே என்று ஷங்கரும் ஒரு சேர யோசிக்கிறார்களாம்!