கமல் விழாவுக்கு ரஜினி வந்தால், மொத்த அட்ராக்ஷனும் அவர் மேல் திரும்பிவிடும் என்பதால் ரஜினியை விழாவுக்கு வரவிடாமல் தடுத்த சில சக்திகளுக்கு இந்த நியூஸ் ஷாக் அடிக்கும்! ரஜினியை பற்றி கேள்விப்பட்ட ஜாக்கிசான், அவரை ஒரு முறை பார்க்கணுமே என்று ஆசைப்பட்டாராம். அட...இதென்ன புது ஸ்டோரி என்கிறீர்களா?
ரஜினியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதியிருக்கும் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த், இந்த புத்தகத்தை சென்னையில் தங்கியிருந்த ஜாக்கிசானை சந்தித்து வழங்கினாராம். அப்போது ரஜினி பற்றியும், தமிழகத்தில் அவர்தான் நம்பர் ஒன் ஸ்டார் என்பதையும் விளக்கி கூறினாராம்.
புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்களை காயத்ரி, ஜாக்கிசானுக்கு விவரித்தபோது ஆர்வத்தோடு அவற்றை கேட்டுக் கொண்ட ஜாக்கிசான் வாவ்... என்று வியந்தாராம். அவரை ஒரு முறை சந்திக்கணும் என்று தனது விருப்பத்தையும் கூறினாராம். கையோடு இந்த புத்தகத்தை எடுத்துச் செல்வேன். முழுமையாக படிப்பேன் என்றும் உறுதியளித்தாராம். ஒருவேளை அந்த புத்தகத்தை அவர் முழுமையாக படித்து முடித்தால், ரஜினியை தொலைபேசியிலாவது தொடர்பு கொள்வார்.
சொல்ல முடியாது இருவரது சந்திப்பும் இதே சென்னையில் நடந்தாலும் நடக்கும்! யார் கண்டது?