தசாவதாரம் விழாவில் அரைகுறை உடையணிந்த மல்லிகா ஷெராவத் மீது, ஆபாச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி பிரமுகர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது போலீஸ்.
உடையணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை. இதில் போலீஸ் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தார்களாம். இதையடுத்து ஸ்ரேயா விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டதோ, அதே போல இந்த விஷயத்திலும் நடந்து கொள்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டது போலீஸ். அதாவது, இந்த புகாரையே தள்ளுபடி செய்துவிடலாம்!
தசாவதாரம் விழா ஆணானப்பட்ட ஜாக்கி சானுக்கே பிரச்சனையை ஏற்படுத்தி அவரை தனது வெப்சைட் மூலம் புலம்ப வைத்தது. அடுத்து சிக்கிய மல்லிகா ஷெராவத், மயிரிழையில் தப்பியிருக்கிறார். ஒருவேளை அவர் மீது நேரடியாக வழக்கு தொடரப்பட்டால், அதற்கு மல்லிகா விளக்கம் சொல்லியே ஆக வேண்டிய நிலையில் இருப்பதால், இந்த ஆபாச மேட்டர் இத்துடன் முடியாது போலிருக்கிறது.
பார்ப்போம் அடுத்த (ª)கட்ட நடவடிக்கையை!