ரஜினிகாந்தின் 'சிவாஜி' படத்தின் சாதனை ஒன்றை, சத்தமின்றி முறியடித்திருக்கிறது விஜய்யின் 'குருவி'!
சென்னையில் மல்டிபிளக்ஸ் ஒன்றில் ஒரே நாளில் 25 காட்சிகள் திரையிடப்பட்டு, 'சிவாஜி' சாதனை படைத்திருந்தார்.
இதற்கு முன் இத்தகைய சாதனையை எந்த தமிழ் படமும் செய்யவில்லை.
இந்நிலையில், அந்தச் சாதனையை விஜய் ரசிகர்கள் தங்களது காலரை உயர்த்தும் விதமாக 'குருவி' முறியடித்துள்ளது.
குருவி திரையிடப்பட்ட ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள்!
இந்தச் சாதனையை கமலஹாசனின் 'தசாவதாரம்' முறியடிக்கக் கூடும் என்று தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'சிவாஜி'யை இந்த ஒரு விஷயத்தில் 'குருவி' முறியடித்திருந்தாலும், அப்படம் பூரண திருப்தியளிக்கவில்லை என்று விஜய் ரசிகர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளதாக செய்திகள் மிதமான வேகத்தில் பறந்து வருகின்றன!