மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் மலைப் பகுதிகளில் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த பறக்கும் மனிதரை சிலர் நேரடியாகப் பார்த்துள்ளனர். ஒரு பெண் பறப்பது போன்ற இந்த வீடியோ படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் உள்ளனரா என்பது பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வழக்கம். ஆனால், "நாசா' போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இவற்றை தொடர்ந்து மறுத்து வருகின்றன. இந்நிலையில், மெக்சிகோவில் படம் பிடிக்கப்பட்ட வேற்றுக் கிரகவாசியின் "வீடியோ' படம் உண்மை என்று கூறப்படுகிறது.
இங்குள்ள நியோவா லியோன் நகரத்தில் கடந்த 2006, மே மாதம் 17ம் தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் மலைகளின் நடுவே தொப்பி அணிந்த பெண் போன்ற உருவம் ஒன்று பறப்பது போல் தெரிகிறது. முதலில் இது மந்திரவாதியாகவோ, சூனியக்காரியாகவோ இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.