நோபல் பரிசு பெற்ற ஒரே இந்திய கவிஞர் தாகூர் ஆவார். அவர் கவிதைகள் எழுதுவதில் மட்டுமல்ல ஓவியங்கள் தீட்டுவதிலும் வல்லவர். மரணக்காட்சி, பறவை எனும் பெயர்களில் அவர் தீட்டிய ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஓவியங்கள் லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன. இவற்றில் மரணக்காட்சி ஓவியம் உச்சபட்ச விலைக்கு விற்று உள்ளது. அந்த ஓவியம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டு உள்ளது. தாகூரின் ஓவியங்கள ;இதுவரை இந்த அளவுக்கு அதிகமாக விற்றது கிடையாது. இந்த ஓவியங்களை சேகரித்து வைத்து இருந்த கலைப்பொருள் சேகரிப்பாளர்கள் வில்லியம், மைல்ட்ரெட்ஆர்ச்சர் ஆகியோர் பாதுகாத்து வந்திருந்தனர். அவர்கள் தான் அவற்றை ஏலத்தில் விட முன் வந்தனர்.
மரணக்காட்சி ஓவியம் 15 ஆயிரம் பவுண்டு ஸ்டெர்லிங்கு தான் ஏலம்போகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது 1,44,500 பவுண்டு ஸ்டெர்லிங்குக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவியம் பறவை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது