ஆங்கில படங்களில் வரும் ஆர்னால்டு போலாகிவிட்டார் சூர்யா. உடம்பை இளைத்து ஓடாக தேய்வதானாலும் சரி, வளைத்து பிடித்து இரும்பாக மாற்ற வேண்டுமானாலும் சரி. எதற்கும் தயார் என்கிறார் சூர்யா! வாரணம் ஆயிரம் படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கும் அவர் இளைய தோற்றத்தில் பாடி பில்டராக வருகிறாராம். இதற்காக இரவு பகலாக உடற்பயிற்சி செய்து கட்டுடல் கொண்டிருக்கிறார் அவர்.
சண்டைக்காட்சிகளில் சட்டையை கழற்றிவிட்டு முண்டா தட்டும் பிற ஹீரோக்கள், இனிமேல் அதுபோல் செய்ய அஞ்சுகிற அளவுக்கு முண்டா ஏற்றி வைத்திருக்கிறார் சூர்யா. தமிழ் சினிமாவில் கட்டுடல் கொண்டவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் முதலில் கமலும், பிறகு சரத்குமாரும் தேறுவார்கள். அதன்பின்தான் அர்ஜுன், விஷால் என்று லிஸ்ட்டை தொடர முடியும். எப்படியாவது தனது படங்களில் சட்டையை கழற்றிவிட்டு நிற்பது போல் ஒரு காட்சியாவது இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள் மேற்படி நடிகர்கள். இந்த கட்டுடல் இல்லாமலே தனது பாடியை காட்டி ரசிகர்களை கிலி பிடிக்க வைப்பவர் தனுஷ். ஒரு ஷேப்பும் இருக்காது பரத்தின் பாடியில். இந் நிலையில் சூர்யாவின் இந்த அசத்தல் ஸ்டில்கள் வெளிவந்திருப்பது ஹீரோக்கள் மத்தியில் பெரும் துடிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜிம்மை தேடியும், முறையான பயிற்சி தரும் கோச்சர்களை தேடியும் அலைகிறார்களாம் சில முக்கிய ஹீரோக்கள்.