அர்ஜுன் நடிக்கும் துரை படத்திலிருந்து நீக்கப்பட்ட பத்மப்ரியாவுக்கு பதிலாக வட்டாரம் படத்தில் நடித்த கீரத் வந்தார். கொப்பும் குலையுமாக இருந்தால்தான் கொண்டாடுவார்கள் தமிழ் ரசிகர்கள். இவரோ, கிள்ளியெடுக்க சதையேயில்லாத ஒல்லிப் பெண். எப்படி ரசிக்க முடியும்? வேறு வழியில்லாமல் படத்தில் இன்னொரு ஹீரோயினாக கஜாலாவை கொண்டு வந்துவிட்டார்கள். பிரச்சனை இல்லாமல் போய் கொண்டிருந்தது படப்பிடிப்பு.
இதற்கிடையில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் கீரத் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். ரோல்தான் முக்கியமே தவிர, கீரத்திற்கும் ஜெயம் ரவிக்கும் ஒரு டூயட் கூட இல்லை. ஒரு துணை நடிகை போல வந்து போனார் கீரத். இதை பார்த்த துரை யூனிட், அப்படியே இவரை டம்மியாக்கிவிட்டு கஜாலாவை உயர்த்திப் பிடித்தார்கள்.
கண்ணெதிரே தனது முக்கியத்துவம் குறைக்கப்படுவதை கண்டு மனம் வெறுத்த கீரத், இன்னும் இன்னும் இளைத்துப் போவதுதான் கொடுமை. இதற்கிடையில் இப்படத்திலிருந்து பத்மப்ரியா ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டதல்லவா? உண்மை என்னவென்றால், பத்மப்பிரயா உள்ளிட்ட முக்கிய மலையாள நடிகைகள் பலரும் ஸ்டார் நைட்டுக்காக ஒன்றரை மாதம் வெளிநாடுகளுக்கு ட்ரிப் அடிக்க போகிறார்கள். படப்பிடிப்பு தாமதமாக துவங்கியதால் அவர் கொடுத்திருந்த கால்ஷீட் காலாவதியாகி விட்டதால்தான் இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டாராம் அவர்.