வாகன போக்குவரத்துகான உலகின் அதிநீள கடல்பாலம் சீனாவில் அமைக்கபட்டுள்ளது.சீனாவில் யாங்சீ ஆறு டெல்டா பகுதியில் உலகின் அதிநீள கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
36 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் சீனாவின் பல்வேறு பகுதிகளை முக்கிய தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கிறது. இதன்மூலம் ஹையான், ஜியாஜிங், சிக்ஸி, நிங்போ ஆகிய நகரங்களில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கருதபடுகிறது.
இந்த மேம்பாலத்தில் சோதனைமுறையில் வாகனப்போக்குவரத்து விரைவில் அனுமதிக்கப்படும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பாதுகாப்பான போக்குவரத்தை கருத்தில் கொண்டு இந்த சமயத்தில் டிரக்குகள், கனரக மற்றும் ஆபத்தான கெமிக்கல் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.