அட்சய திருதியையை முன்னிட்டு சென்னையில் நகைக்கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 70 தொன் வரை தங்கம் விற்பனையாகியிருக்கலாம் என உலக தங்க சபை தெரிவித்துள்ளது.
நேற்றும் இன்று நகைக்கடைகளில் கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அதிகளவில் குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதியது. முந்தைய ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அட்சய திருதியை இருதினங்கள் கொண்டாடப்பட்டது. நேற்று மட்டும் ஒரே நாளில் 40 தொன் வரை தங்கம் விற்பனையாகியிருக்கலாம் என உலக தங்க சபை நிர்வாக இயக்குநர் அஜய் மித்ரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தங்க நாணயங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் 2.5 கிராம், 5 கிராம், 10 கிராம், 20 கிராம் மற்றும் 50 கிராம் எடைகளில் தங்கக் காசுகள் சிறப்பு விற்பனைக் கருமபீடம் அமைக்கப்பட்டு விற்பனைகள் நடைபெற்றன. நடைக்கடைகளில் அதிக அளவு தங்கம் வாங்கியவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டன.