சவுந்தர்யா ரஜினிகாந் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.
ஹலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ், சவுந்தர்யாஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயாரிக்கவுள்ளது. இதில் முதல் கட்டமாக அஜித் நடிப்பில் விஸ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். ஏற்கனவே அஜித், விஸ்ணுவர்த்தன் இணைந்து பில்லா படத்தில் பணிபுரிந்தனர். இதனால் பில்லா படத்தின் இரண்டாம் பாகமாக இப் படம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தப் படம் ரூ. 30 கோடியில் தயாரிக்க உள்ளது. அஜித்துக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் பெறும் நடிகராகியுள்ளார் அஜித். இப்போது ஏகன் படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதையடுத்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின் சவுந்தர்யா தயாரிப்பில் நடிக்கிறார்.