ஹிந்தி மான் குட்டி மல்லிகா ஷெராவத்தை யானைக் குட்டி தூக்கியடிக்கும் காட்சி ஒன்றிருக்கிறதாம் தசாவதாரத்தில்! நடந்தால் நாட்டியம். வாய் திறந்தால் வாத்தியம், என்கிற மாதிரியே இருக்கும் மல்லிகாவின் நடவடிக்கைகள்! அதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள் தசாவதாரம் விழாவில்.
மல்லிகாவின் இந்த மான்குட்டி துள்ளலை பார்த்தால் மதம் பிடித்த யானை சும்மாவா இருக்கும்? தூக்கி வீசுகிற மாதிரி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். இதை படமாக்குகிற போது இருந்த த்ரில்லை விட பார்க்கும்போது அதிகம் இருந்ததாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கிசுகிசுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவரது த்ரில் இப்படியென்றால் படப்பிடிப்பு தளத்தில் மல்லிகாவுக்கும், கௌதமிக்கும் மல்லுக்கட்டு நடந்ததே, அதற்கு பெயர் என்னவாம்? என்கிறார்கள் யூனிட் ஆட்கள். தசாவதாரம் படத்தின் காஸ்ட்யூம் டிசைனராகவும் இருக்கிறார் கௌதமி. மல்லிகாவுக்காக ஒரு ஆடையை செலக்ட் செய்தவர், அதை அவரிடம் கொடுக்க கேரவேனுக்குள் ஏறினாராம். உள்ளே போய் கொஞ்ச நேரத்தில் ஆக்ஷன் பிளாக் அரங்கேறியது. காச்மூச் என்று கத்திக் கொண்டே வெளியே வந்தாராம் கௌதமி. இவர் கொடுத்த ஆடையில் சில கரெக்ஷன்களை சொன்னாராம் மல்லிகா. இதையடுத்துதான் இந்த ஆக்ஷன் எபிசோட்!
நல்லவேளை சண்டை பெரிதாகி இருவரும் கட்டி உருண்டிருந்தால், சண்டைப்பயிற்சி என்ற இடத்தில் கௌதமியின் பெயரையும் போட வேண்டியிருந்திருக்கும்!