பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் சார்பில் ராதாமோகன் எழுதி இயக்கும் படம் 'அபியும் நானும்'. இந்த படத்தில் தந்தையாக பிரகாஷ்ராஜ் மகளாக திரிஷா நடிக்கின்றனர். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி மூணாறில் தொடங்குகிறது.
த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க குஷ்புவிடம் தேதி கேட்டார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக குஷ்பு மறுத்துவிட்டார். இப்போது அந்த வேடத்தில் மலையாள நடிகை லஷ்மி கோபாலசாமி நடிக்கிறார்.