தமிழ் சினிமா கதாநாயகிகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிற திரிஷா தெலுங்கில ஒரு கோடியை தொடும் சம்பளத்தை வாங்குகிறார்.
அதே அளவுக்கு தமிழிலும் சம்பளம் பேசுகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் இதே அளவு மெகா சம்பளம் திரிஷாவுக்கு தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார், பெயரிடப்படாத அந்த தமிழ் படத்தில் நடிக்க சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. இவரின் இந்த திடீர் சம்பள குறைப்பு மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.