சிம்ரன் திருமணத்திற்கு பிறகு டி.வி. தொடரிலும் சினிமாவிலும் நடித்து வரு கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- நான் திருமணத்திற்கு பிறகு 3 ஆண்டு கழித்து நடிக்க வந்துள்ளேன். நான் நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பதாக சிலர் வதந்தி பரப்பியுள்ளனர். அது தவறு. நான் நல்ல படம் என்றால் குறைந்த சம்பளம்தான் வாங்குகிறேன்.
சிலர் என்னிடம் குஷ்பு இடத்தை உங்களால் பிடிக்க முடியவில்லையே என் கிறார்கள்.
என்னால் ஒரு போதும் குஷ்பு இடத்தை பிடிக்க முடியாது. நான் நானாக இருக்கத்தான் விரும்பு கிறேன்.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. அதே போல் எனக்கும் தனித் தன்மை உள்ளது. நான் ஒரு போதும் என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க விரும்புவதில்லை. புதிதாக சினிமாவுக்கு வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அட்வைஸ், ஒவ் வொருவரும் தனித்தன்மை யுடன் இருக்க வேண்டும் என்பது தான். அப்போது தான் அவர் கள் சினிமாவில் வெற்றி பெற முடியும்.
நான் திருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து ரஜினி நடித்த சிவாஜி, சந்திரமுகி போன்ற படங் களை பார்த்தேன். அதில் ரஜினியின் நடிப்பு அபார மாக இருந்தது.
இதே போல பருத்தி வீரன், அஜித் நடித்த பில்லா, பழனி, போக்கிரி போன்ற படங்களையும் பார்த்தேன். நன்றாக இருந்தது.
இவ்வாறு சிம்ரன் கூறி னார்.