மாம்பழ சீசன் தொடங்கியதும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துவிடுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடையில் வெயில் சுட்டெரித்தாலும், எப்போது கோடை காலம் வருமென்று காத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். காரணம் கோடையில் மட்டுமே கிடைக்கும் மாம்பழம் தான். ஆனால் மாம்பழ சீசன் தொடங்குகிறது என்றாலே டாக்டர்களுக்கு அலர்ஜpதான் என்கிறhர் ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் மகிபான் தாமஸ்.
ஹhங்காங்கில் நேற்று நடந்த மருத்துவ கருத்தரங்கில் பேசிய அவர் இதற்கான காரணங்களை விளக்கினார். அதன் விவரம்
கோடையில் வெப்பம் கடுமையாக அதிகரிப்பதால் மூளையில் ஒரு வகை ரசாயனம் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் கோபம் அதிகமாக வரும். இதன் காரணமாக எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்கள். சிறுசிறு பிரச்சனைகள் கூட பெரிய மோதலாக மாறிவிடும்.
ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்கள் தான் கோடை காலம். அப்போது வெப்பம் அதிகமிருக்கும். மழை பெய்யாது. இதனால் புழுக்கம் அதிகமாக இருக்கும். மாம்பழ சீசனும் அப்போது தான் தொடங்கும். இந்த காலகட்டத்தில் எலும்பு முறிவு, உடலில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகமாக இருக்கிறது. 1994ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான மருத்துவமனை ஆவணங்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.அதிலும் குறிப்பாக இரவு நேரங்களிலும் வெப்பம் அதிகமாக இருப்பதால், மோதல்களும் அதிகமாக நடக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தற்கொலை சம்பவங்களும் அதிகரிக்கின்றன. எனவே கோடை வரும்போது பொதுமக்கள் உஷhராக இருக்க வேண்டும்.
இவ்வாறு மகிபான் தாமஸ் கூறி உள்ளார்.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர் மாத்யூ கூறுகையில், மனிதனின் மனநிலைக்கும், வானிலைக்கும் தொடர்பு உள்ளது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது என்றார்.