நடிகர் விஜய், திரிஷா நடித்துள்ள `குருவி' படம் நாளை (3-ந் தேதி) ரிலீஸ் ஆகிறது. டைரக்டர் தரணி இயக்கியுள்ள இப்படத்ததுக்கு வித்யாசாகர் இசையமைத் துள்ளார். அமைச்சர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரித்துள்ளார்.
விஜய் நடித்த படங்க ளிலேயே பிரமாண்டமாக இப்படம் தயாராகியுள்ளது. `கில்லி' வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இப்படத்துக்கு பெரிய எதிர் பார்ப்பு உள்ளது. அதற்கேற் றாற்போல் பாடல்களும் `ஹிட்' ஆகி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
இப்படத்துக்கான முன்பதிவு கடந்த 29-ந் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட் டுகள் விற்று தீர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர கேரளாவில் 60 தியேட்டர் களிளும்,சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகிறது.
கேரளாவில் மலையாள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஏற்படும் எதிர்பார்ப்பையும் `குருவி' மிஞ்சி விட்டதாம்.மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் கூட 50 முதல் 55 தியேட்டர்களில் தான் ரிலீசாகும் நிலையில் `குருவி' படம் 60 தியேட்டர்களில் ரிலீசாகி சாதனை படைத் துள்ளது. அதுவும் கொச்சி, திருவனந்தபுரம், எர்ணா குளம் போன்ற பெரிய நகரங் களில் 2 தியேட்டர்களில் ரிலீசாகிறது.
மேலும் தமிழகத்தை போலவே கேரளாவிலும் `குருவி' படத்துக்கான முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே ஒரு வாரத் துக்கான டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த `போக்கிரி' படம் கேரளாவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று மலையாள முன்னணி நடிகர்களுக்கு `கிலி'யை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கேரளாவில் தமிழ் படங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. அதாவது தமிழ் நாட்டில் ரிலீசான ஒரு வாரத் துக்கு பின்னர் தான் தமிழ் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் ரிலீசாகும் அதே நாளில் தமிழ்படங்கள் கேரளாவிலும் ரிலீசாகி வருகிறது.
இந்த நிலையில் கேரளா வில் `குருவி' படத்தின் அடுக்கடுக்கான சாதனை மலைளாள முன்னணி நடிகர்களை மிரள வைத்துள் ளதாம்.