கனடா நாட்டு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் (RIM) தயாரிக்கும் பிரபல ப்ளாக்பெரி செல்போன் விரைவில் டச்-ஸ்கிரீன் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஐடி இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில், நடப்பு நிதியாண்டின் 3ம் காலாண்டில் டச்-ஸ்கிரீன் வசதியுள்ள ப்ளாக்பெரி அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது வெரிசோன் (அமெரிக்கா) மற்றும் வோடாபோன் (பிறநாடுகளில்) நிறுவனங்களின் வாயிலாக விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து ரிம் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ரிம் நிறுவன துணை முதன்மை நிர்வாகி ஜிம் பல்ஸில்லி, வாடிக்கையாளர்கள் விரும்பினால் டச்-ஸ்கிரீன் (Touch screen) வசதியுடையை ப்ளாக்பெரி செல்போனை ரிம் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்றார்.
தொடுதிரை (டச்-ஸ்கிரீன்) வசதியுள்ள ப்ளாக்பெரி செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டால், அது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சாதனத்திற்கு கடும் சவாலாகவும், போட்டியாகவும் விளங்கும் என இத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.