ஏவுகணை தளம் அமைக்கப்படும் போது போலந்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமெரிக்கத் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்காமையால் அமெரிக்காவின் ஏவுகணை தளம் அமைக்கும் கோரிக்கையை போலந்துப் பிரதமர் டொனால்ட் ருஸ்க் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பிலான பேச்சுக்கள் அமெரிககாவுடன் தொடர்ந்து இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
போலந்தில் அமெரிக்கா ஏவுகணைத் தளத்தை நிறுவும் நகர்வை ரஷ்யாவும், சீனாவும் வன்மையாக் கண்டித்துள்ளன. இதேநேரம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐரோப்பாவில் இராணுவச் சமநிலையைப் பாதிக்கும் எனவும் எச்சரித்துள்ளது. அத்துடன் தாங்களும் தங்களுடைய ஏவுகணைகளை குறித்த நிலைகளில் நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்யா மேலும் எச்சரித்துள்ளது.
இதேநேரம் அமெரிக்கா செக்குடியரசிடம் தனது ராடர் நிலையத்தை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும். அடுத்த வாரம் செக் குடியரசின் அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார்.