அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையிலேயே இப்புதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த எம்.பி.க்கள் குழு ஒன்று நேற்று முன்தினம் டில்லியில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பிரதமர் மன்மோகன்சிங்கின் சிறப்பு தூதர் ஷியாம் சரணையும், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனையும் சந்தித்து பேசியது.
அப்போது அடுத்த மாதத்திற்குள் அமெரிக்க பாராளுமன்றத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு அணுசக்தி ஒப்பந்தம் வர வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி புஷ்ஷின் பதவி காலத்திற்குள், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் கூறினார்கள்.
அதற்கு, அணுசக்தி ஒப்பந்தத்தை கூடிய சீக்கிரத்தில் அமுல்படுத்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி ஷியாம் சரணும், சிவ்சங்கர் மேனனும் விளக்கினார்கள். இச்சந்திப்பு குறித்து அமெரிக்க குழுவின் தலைவர் கேரி அக்கர்மேன் கூறியதாவது:
சர்வதேச அணுசக்தி கழகம் மற்றும் அணு எரிபொருளை விநியோகிக்கும் நாடுகள் குழு ஆகியவற்றுடன் அடுத்த மாதத்திற்குள் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள தவறினால், அமெரிக்காவில் அடுத்து புதிதாக பதவியேற்கும் அரசுதான் இந்த ஒப்பந்தம் பற்றி முடிவு எடுக்க முடியும்