சீனத் தலைநகர் பீய்ஜிங்கின் விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அதாவது பயணிகள் தளம் ஒன்று இன்று உத்தியோகப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, முதன்முதலாக பயணிகளை வரவேற்றுள்ளது.
இவ்வாண்டில் பின்னர் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் இத்தளத்தைப் பயன்படுத்துவார்கள்.
உலகின் மிகப் பெரிய விமான பயணிகள் தளம் இதுதான் என்று சீனா கூறுகிறது. 170 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவு கொண்டது அது.
பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் நோர்மன் ஃபாஸ்டர் இதனை வடிவமைத்துள்ளார். நான்கே ஆண்டுகளில் ஐம்பதாயிரம் பணியாளர்களைக் கொண்டு இந்த பயணிகள் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.