ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தங்கியுள்ள சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர்.
மாஸ்கோவில் சுமார் பத்து லட்சம் குடியேற்றக்காரர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
மாஸ்கோ மேயர் அலுவலகம் வழங்கியுள்ள இந்தப் பொதுமன்னிப்பு, மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது.
தங்களைப் பதிவு செய்துகொள்ளவும், வேலை தேடிக்கொள்ளவும் அவர்களுக்கு ஒரு மாத காலம் தரப்படுகிறது.
வெளிநாட்டவருக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகம் இருப்பதாலும், பொலிசார் மீதான அச்சம் காரணமாகவும் பலர் தங்களைப் பதிவு செய்துகொள்ள முன்வரமாட்டார்கள் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இம்மாதம் முன்னதாக மாஸ்கோவில் நடந்த ஒரு கூட்டத்தில் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் விவகாரத்தை எழுப்பி மத்திய ஆசிய நாடுகளின் அதிபர்கள் அழுத்தம் தந்ததை அடுத்து இந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.