மலேசியாவின் இஸ்லாமிய கட்சி பார்ட்டி இஸ்லாம் சே மலேசியா. எதிர்க்கட்சிகளில் ஒன்றான இது மலேசியாவை இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்யவேண்டும் என்று போராடி வந்தது. சமீபத்தில் தான் இந்த கோரிக்கையை இது கைவிட்டது. இந்த கட்சி சார்பில் ஒரு இந்து பெண் போட்டியிடுகிறார். அவர் பெயர் குமுதா. 29 வயதான அவர் மலேசியாவின் தெற்கு பகுதியில் மலாய் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உளு டிராம் தொகுதியில் (ஜோகூர் பாரு மாநிலத்தில்) வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். முஸ்லிம் அல்லாதவர்களின் ஓட்டுக்களையும் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்துப்பெண்ணான அவரை அந்த கட்சி நிறுத்தி உள்ளது.
வங்கியில் கிளர்க் வேலை பார்த்த இவர் இந்த வேலையை விட்டு விலகி விட்டார். அவர் நிருபர்களிடம் கூறுகையில் என் சக இந்தியர்கள் நான் முஸ்லிம் கட்சியில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இஸ்லாமிய கட்சியின் கொள்கைகளை படித்தேன். அதில் என் கொள்கைகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்று கூறினார்.