தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் பெனாசிர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணை தலைவருமான ஆஸிப் அலி சர்தாரி மற்றும் பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் மக்தூம் அமின் ஃபகிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நெருக்கடி நிர்வாக பிரிவு, மேற்கூறிய இருவருக்கும் இத்தகவலை அனுப்பி , உஷாராக இருக்கும்படி எச்சரித்துள்ளது.
இவர்கள் இருவர் தவிர முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷித்தின் இந்த கொலை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்தாரி உள்ளிட்டவர்களை கொல்ல கணிசமான எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் எந்த தீவிரவாத குழு இந்த கொலை பட்டியலை தயாரித்துள்ளது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
அன்னியர்களை அருகில் நெருங்கவிட வேண்டாம்.மேற்கூறிய தலைவர்கள் எப்பொழுது வெளியில் சென்றாலும் அல்லது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் பாதுகாப்பு வளையம் தொடர்ந்து அவர்களை சுற்றி இருக்க வேண்டும் என பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.