ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் 70 சதவீத ஓட்டுகளை பெற்று புடினின் ஆதரவாளர் திமித்ரி வெற்றி பெற்றுள்ளார்.
ரஷ்யாவில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வாக்கு பதிவுகள் நேற்று நடைபெற்றன. இதில் விளாடிமிர் புடினின் ஆதரவாளர் வெற்றி உறுதி என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேவேளை இந்த தேர்தல், ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை, என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பதவி காலம் முடிவடைவதையொட்டி, புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடந்தது. புடினின் ஆதரவாளரும் துணை பிரதமருமான திமித்ரி மெட்வேடவ்(42) புடினின் ஆதரவு கட்சிகளான ஐக்கிய ரஷ்யா, ஏ ஜஸ்ட் ரஷ்யா, அகாரேரியன் கட்சி, சிவில் போர்ஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடுகிறார்.
. இவரை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஜென்னடி சுகுனோவ், ஜனநாயக கட்சி சார்பில், ஆன்ட்ரி பாக்டனோவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.திமித்ரி மெட்வேடவ் ஜனாதிபதியாகும் பட்சத்தில், புடின் பிரதமர் பதவியை ஏற்பார், என கூறப்படுகிறது. பழைய தலைமுறையோ அல்லது ரஷ்ய உளவுத்துறையான `கே.ஜி.பி'க்கு தொடர்பு இல்லாத இவர் புடினின் கைப்பாவையாகச் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்த தேர்தல், ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை' என முன்னாள் செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் குற்றம் சாட்டியுள்ளார். `மாஸ்கோ நகருக்குள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சர்வதேச பார்வையாளர்களோ, மனித உரிமை இயக்கத்தினரோ அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்தல், ஜனநாயக கேலிக்கூத்து' என காஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறைப்படி நடக்காத இந்த தேர்தலை, அங்கீகரிக்கக்கூடாது' என காஸ்பரோவ், தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கடந்த டிசம்பர் மாதம் காஸ்பரோவ் கைது செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் மொத்தம் 11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மொஸ்கோவில் மட்டும் 24 ஆயிரம் பொலிஸாரும், நாடு முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் பொலிஸாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகி, இது வரை 90 சதவீதம் வாக்கு எண்ணும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதில் 70 சதவீத வாக்குகளை பெற்று திமிட்ரி முன்னிலையில் உள்ளார். எனவே அவரது வெற்றி உறுதியாகியுள்ளது.