பாகிஸ்தானில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அமெரிக்கா , இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள்தான் காரணம் என அந்நாட்டின் உளதுறை அமைச்சர் ஹமித் நவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அரேபிய தொலைக்காட்சி ஒன்றுக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது :
பாகிஸ்தானில் தற்போது காணப்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தொடர்பு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.
அதிலும் பாகிஸ்தானில் நிகழும் தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் ஆதரவு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானில் ஏற்படும் குழப்பங்களுக்கு இதுவரை அநநாடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மட்டுமே குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக அமெரிக்கா மீதும் பாகிஸ்தான் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஹமித்தின் இந்த பேட்டியால் மிகவும் அதிருப்தியடைந்துள்ள இஸ்லாமாப்பாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பேட்டர்சன் , இன்று காலை தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொண்டு அவரது பேட்டி குறித்து தனது அதிருப்தியை தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.