யுரேனியம் செரிவூட்டும் பணியை உடனடியாக ஈரான் நிறுத்த நிர்ப்பந்திக்கும் வகையில் அந்நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள தடைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
.
ஐ.நா.வின் இந்த நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி அந்நாட்டின் மீது ஏற்கனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இருந்த போதிலும் யுரேனியம் செரிவூட்டும் பணியை நிறுத்திக் கொள்ள ஈரான் மறுத்து வருவதால் மீண்டும் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த கவுன்சிலில் இடம் பெற்றுள்ள இந்தோனேஷியா இந்த தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது.
இந்த தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் சார்பாக பிரிட்டன் தூதர் ஜான் சாவர்ஸ் வெளியிட்டார். இதனிடையே இந்த தீர்மானத்தை சட்ட விரோதம் என்று ஈரான் கூறியுள்ளது.