பாகிஸ்தானில் இன்றும் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலியாயினர் ; பலர் காயமடைந்தனர்.
லாகூரில் உள்ள கடற்படை தலைமை அலுவலகம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்றது.
கடற்படை கல்லூரி அருகே உள்ள மெயில் ரோடு என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை ஓட்டிவந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன், அந்த லாரியை வெடிக்கச் செய்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.பலர் காயமடைந்தனர்.
இதனால் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.மேலும் குண்டு வெடிப்பு நிகழலாம் என்ற அச்சத்தில் அங்கு நின்றிருந்தவர்ர்கள் அங்கிருந்து பீதியில் ஓடினர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை சுற்றி வளைத்த போலீஸார், தடயங்களை யாரும் அழித்துவிடக் கூடாது என்பதற்காக அந்த இடத்தை சீல் வைத்தனர்.
அதே நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.