உயர் தொழிற்திறன் கொண்டவர்களுக்கான குடிவரவுத் திட்டத்தில் பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவரும் மாற்றங்களை எதிர்த்து. பிரிட்டனின் குடிவரவாளர் நலன் அமைப்பு ஒன்று சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையில் பிரிட்டனுக்குள் நுழைந்த சுமார் ஐம்பதாயிரம் உயர் திறன் கொண்ட தொழிலாளர்களில் 90 வீதத்தினரைப் இந்த மாற்றங்கள் பாதிக்கும் என்று இந்தக் குழு கூறியிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் குடிவரவு தொழிலாளர்கள் தொடர்ந்து பிரிட்டனில் தங்குவதற்கு மீண்டும் விண்ணப்பித்தாக வேண்டும்.
இதனடிப்படையில் பலர், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேசம், மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து இங்கு தங்குவதற்கு தகைமை பெறும் வாய்ப்பு இல்லாது போகும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் புதிய திட்டம் முன்னைய நிகழ்வுகளையும் உள்ளடக்குவதாகவும், மனித உரிமை சட்டங்களை மீறுவதாகவும் அமைந்துள்ளது என இந்தக் குழுவினர் கூறுகிறார்கள்.