பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சி இன்று அறிவிக்க உள்ளது.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத போதிலும், படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் பாகிஸ்தான் மக்கள் கட்சியும்,முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் - என் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
பிரதமர் பதவியை பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் சர்தாரி இன்று அறிவிக்க உள்ளார்.
அநேகமாக ஏற்கனவே வெளியான தகவலின்படி அக்கட்சியின் துணை தலைவரான மக்தூம் அமின் ஃபகிம், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.