ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆபர் அம்மையார் பணி விலகல் செய்யத் தீர்மானித்துள்ளதாக ரொயிற்றர் செய்தி சேவையை மேற்கோள் காட்சி செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் இவரது பணி விலகல் முடிவை ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பணிவிலகுவதற்கான காரணத்தை லூயிஸ் ஆபர் அம்மையார் இதுவரை தெரிவிக்கவில்லை. எதிர்வரும் யூன் மாதத்துடன் ஆபர் அம்மையார் பொறுப்புக்களிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளார்.
61 அகவையுடைய ஆபர் அம்மையார் கனேடிய உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் ஐ.நா.வின் யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணிபுரிந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.