இங்கிலாந்தில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பொன்றில், அதிக செல்வாக்குப் பெற்ற முக்கிய 10 நிர்மாண கட்டமைப்புகளில் முதலாமிடத்தை இந்து ஆலயமொன்று சுவீகரித்துள்ளது. லண்டனைச் சேர்ந்த 9 சபைகள் பங்குபற்றிய இவ்வாக்கெடுப்பில் 36,800 பேருக்கும் அதிகமானோர் இணையத்தளம் மூலம் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் வட லண்டனிலுள்ள நேஸ்டெனில் அமைந்துள்ள பாபஸ் ஸ்ரீ சுவாமிநாராயண மாந்திர் ஆலயமானது, 2300 க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று "பிரைட் ஒப் பிளேஸ்' விருதை சுவீகரித்துள்ளது. இவ் ஆலயமானது ஐரோப்பாவில் கட்டப்பட்ட மிகப் பெரிய இந்து ஆலயமாக விலங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.