|
ஏப்ரல் 15 ஆம் நாள் முதல் 22 ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்கினறார்.
ஈரான் அரச தலைவரின் பயணத்தின் போது "உம ஓய" நீர்மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகை நிகழ்வில் அவர் பங்கேற்கிறார்.
ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தடைகளை விதித்து வரும் நிலையில் ஈரான் அரச தலைவர், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வது மேற்குலக நாடுகளை அதிருப்தியடையச் செய்யும் என்று கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் ஈரானுக்கு மகிந்த மேற்கொண்ட பயணம் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அதிருப்தியைத் தெரிவித்திருந்ததை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். |