சீனா தலைநகர் பீஜிங்கில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி சீனா அரசு அதிகாரிகள் கூறும்போது பீஜிங்கில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் வரும் 2010ம் ஆண்டிற்குள் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய விமான நிலையத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் பயணிகள் பயனடைவார்கள். மேலும், பயணிகளுக்கு வசதியாக 64 உணவு விடுதிகளும், 300 பரிசோதிக்கும் மையமும் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.