பாகிஸ்தானில் அண்மையில் நடந்த தேர்தலில் முன்னுக்குவந்த இரண்டு முன்னணி எதிர்க் கட்சிகளுடைய தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு கண்டுள்ளனர்.
இது அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் புட்டோ அவர்களின் தலைமையின் கீழ் இயங்கிய பாகிஸ்தான மக்கள் கட்சியையும், முந்நாள் பிரதமர் நவாஷ் ஷரீஃப் அவர்களின் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியையும் ஒன்றாகக் கொண்டு வருகிறது.
இந்த உடன்படிக்கையின் கீழ் அதிபர் முஷாரஃப் அவர்களினால் பதவியிறக்கப்பட்ட பல நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்கள்; நாடாளுமன்றம் இனி அதிபருக்கு எதிரான கட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.