டாக்கா - கோல்கத்தா இடையே விரைவில் மீண்டும் ரயில் சேவையை தொடங்குவதற்கான இந்தியாவின் ஒப்புதலை எதிர்நோக்கி உள்ளதாக பங்காளதேஷ் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பக பங்காளதேஷ் உளதுறை அமைச்சக ஆலோசகரான குலாம் குதார் கூறியதாவது :
டாக்கா - கோல்கத்தா இடையேயான ரயில் சேவையை தொடங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பங்காளதேஷ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது.இந்த ஒப்பந்தம் வெளியுறவுத் துறை அமைச்சகம் வாயிலாக இந்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அரசின் ஒப்புதல் கிடைப்பதை பொறுத்து இந்த ரயில் சேவையை வருகிற ஏப்ரல் 14 ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.