பிரான்ஸ் மாநகரசபைத் தேர்தலில் 14 நகரசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் போட்டியிட்டனர். இதில் 2008.03.09 ந் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆறு தமிழர்கள் வெற்றி பெற்றனர்.
பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் முழுமையான வழிகாட்டல்களுடனும், ஆலோசனைகளுடனும், நெறிமுறைப்படுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர்கள் ஆறுபேர் முதல் சுற்றில் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.
இது பிரான்ஸ்வாழ் தமிழ்மக்களுக்குக் கிடைத்த முக்கியமானதொரு அரசியல் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறையே இவ்வாறானதொரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு, எடுத்த எடுப்பிலே இவ் வெற்றி கிடைத்ததென்பது, பிரான்ஸ்வாழ் தமிழர்கள் இந்நாட்டில் தம் அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பானதொரு நடவடிக்கை என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரான்ஸில் வாழும் மக்கள், பிரான்ஸ் நாட்டின் தேசியத்தில் தங்களது பங்கை பணியை எடுத்துச்செல்கின்றனர். இதன் மூலம் இவர்களது நிலை உயர்ந்த சிறப்பை அடைந்துள்ளது.
அத்துடன் 16.03.2008 அன்று மேலும் சில தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. மற்றும் தற்போது தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் விபரங்கள் பின்வருமாறு.
1. லூவார் (95380) நகரசபையில் திருமதி வேர்ஜினி சபாரட்ணம் (வலது)
2. சார்சல் (95200) நகரசபையில் செல்வி சூசைப்பிள்ளை சன்டிறின் சோபியா (இடது)
3. கிளிச்சி சூ புவா (93390) நகரசபையில் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் (இடது)
4. பொண்டி (93140) நகரசபையில் திருமதி லீலாவதி ராஜேந்திரன் (இடது)
5. செல் (77500) நகரசபையில் வில்லியம் றெஜிநோட் அசந்தா (இடது)
6. எவ்றி குக்றோண் (91000) திருமதி பிரிதி நவனீதராயு(இடது)