காசா பகுதியில் ஒரு போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவது குறித்து இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஹமாஸ் அமைப்புடன் தாம் பேச்சு நடத்துவதாகக் கூறப்படுவதை, இஸ்ரேலிய பிரதமர் எஹூத் ஒல்மேர்ட் மறுத்துள்ளார்.
காசாவில் இருந்து தாக்க வரும் ராக்கட்டுகள் குறைந்த பிறகு, அந்தப் பிராந்தியத்தைத் தாக்குவதற்கான எந்தக் காரணமும் இஸ்ரேலுக்குக் கிடையாது என்று ஒல்மேர்ட் கூறியுள்ளார்.
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸுடன் பேசுவதற்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு எகிப்தை இஸ்ரேல் கேட்டதாகக் கூறப்படுவதையும் இஸ்ரேல் மறுத்துள்ளது.
ஆனால், பாலத்தீன மக்கள் மீதான தடைகளை நீக்குவது குறித்து தாம் எகிப்துடன் இணைந்து செயற்பட்டுவருவதாக, ஹமாஸ் அமைப்பின் சார்பில் பேசவல்ல இஸ்மாயில் ஹனியா தெரிவித்துள்ளார்.