பாகிஸ்தானில் லாஹூர் நகரில் நடந்த இரண்டு தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்களில், இருபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு குண்டு, நூற்றுக்கணக்கானோர் பணியாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் தலைமையகம் ஒன்றை பாதியளவுக்கு நிர்மூலம் செய்துள்ளது.
இரண்டாவது குண்டு, மக்கள் வாழும் வீடுகள் செறிவான பகுதி ஒன்றைத் தாக்கியுள்ளது.
பாகிஸ்தானின் சட்ட அமலாக்க அலுவலகங்களை தீவிரவாதிகள் தாக்குவது தெளிவாகத் தெரிவதாக லாகூர் பொலிஸ் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்படுவதாக அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்படும் தொடர்ச்சியான வன்செயல்களில் இந்த வருடத்தில் ஐநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்