அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, மிசிசிபியில் நடந்த ஜனநாயகக் கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றார்.
இந்த மாகாணத்தில், ஒபாமாவுக்கு 59 சதவிகித கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவும், இவரது போட்டியாளரான ஹிலாரி கிளின்டனுக்கு 39 சதவிகித பிரதிநிதிகளின் வாக்குகளும் கிடைத்தன.
இந்த வெற்றி குறித்து ஒபாமா கூறுகையில், மிசிசிபியில் தனக்கு கட்சிப் பிரதிநிதிகளிடையே ஆதரவு கிடைத்திருப்பது சிறப்பான ஒன்று எனக் குறிப்பிட்டார்.
இதன்மூலம், 25 மாகாணங்களில் வெற்றி பெற்ற ஒபாமா, 1,579 பிரதிநிதிகளின் ஆதரவினை தன்னகத்தே கொண்டுள்ளார்; அவரைக் காட்டிலும் சற்று பின்தங்கியுள்ள ஹிலாரிக்கு 1,473 (16 மாகாணங்களில் வெற்றி) பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.