லாகூரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தீவிரவாதச் செயல், மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கவலைக்குரியது என்று கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசும், மக்களும் இணைந்து செயலாற்றி வருவது வரவேற்கத்தக்கது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லாகூரில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.