பர்மியப் பிரஜைகள் 51 பேர் இலங்கையில் தஞ்சம் கோரியுள்ளதாக இலங்கையில் இருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கை கடற்படையினரால் அண்மையில், கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளையில், கண்டுபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினரே இவர்களாவர்.
பழுதடைந்த நிலையில் கடலில் அலைமோதிக்கொண்டிருந்த இந்தக் கப்பலில், மேலும் சுமார் 20 வங்கதேசத்தவர்கள் உட்பட சுமார் 70 பேர் வரை மீட்கப்பட்டனர்.
வங்கதேசத்தில் இருந்து இந்தக் கப்பல் பயணித்த சமயத்தில் மேலும் 20 பேர் கப்பலிலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மலேஷியாவுக்கு வேலை தேடிச் செல்ல முயன்றவர்கள் இவர்கள் என்று நம்பப்படுகிறது.