இராக்கிய தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக இராக்கியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகரின் வணிக மாவட்டம் ஒன்றிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
முந்தைய மாதங்களில் வன்செயல்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மாறாக, அண்மைய வாரங்களில் அதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இராக்கில் ஏனைய நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால், டியாலா மாகாணத்தில், ஒரு இளம் பெண்ணை தாம் சுட்டுக்கொன்றதாக அமெரிக்க இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.