மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
சியாப்பாஸ் மாகாணத்தின் மபஸ்டெபெக் நகர் பகுதியில் மையம் கொண்டு, இந்திய நேரப்படி இன்று காலை 4.31 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியிருந்தது என்று அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இந்நிலநடுக்கத்தால் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் உடனடியாக இல்லை.
மெக்சிகோவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 70 முறை நில அதிர்வு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.