இரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில், கடந்த தேர்தல்களை விட பெருமளவிலான மக்கள் வாக்களித்திருப்பதாக இரானின் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவிக்கிறார்.
இதே நிலை நீடித்தால், இதுதான் அதிகபட்சமான வாக்குப்பதிவாக இருக்கும் என்று அலி ரெஸா அஃப்சர் என்ற அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அதிபர் முகமது அஹமதிநிஜாத்தின் எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானவர்கள், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தங்களின் பிரதிநிதிகள், வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று பார்வையிடாமல் தடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.